உலகில் வேறெங்கும் இல்லாத, சிறப்பு மிகுந்த அம்சங்கள் கொண்ட, தனித்துவம் மிக்க ஒன்றைத்தான் அதிசயம் என்பார்கள்!
அந்த வகையில், தமிழ் மென்பொருட்களிலேயே,
"வேறெந்த மென்பொருளிலும் இல்லாத" சிறப்புமிக்க அம்சங்கள்,
மற்றும் குறிப்பாக...,
மிகவும் சுலபமான,
இயற்கையான,
இடத்திற்கேற்ப மாறி அமையும்
ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல்-இணைப்பு (English-to-Tamil phonetic keymappings. i.e. transliteration scheme) கொண்டு விளங்கும் தனித்துவமிக்க தமிழ் மென்பொருள்,
அழகி மட்டுமே!
'எப்படி?' என்ற வினாவிற்கான விவரமான விளக்கங்கள் அறிய,
http://azhagi.com/easy.html
மற்றும்
http://azhagi.com/docs.html
பார்க்கவும்.
அழகியின் 'இன்றியமையா' ஒலிபெயர்ப்பு அமைப்பு
(easiest and most natural transliteration scheme) குறித்து, மழலைகள்.காம் ஆசிரியர் திரு. ஆகிரா அவர்களும் கீழ்க்கண்ட பக்கங்களில் விரிவாகவும், விவரமாகவும் எழுதியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.
1) Easy transliteration with azhagi - part1
2) Easy transliteration with azhagi - part2
இத்தகைய தனிப்பெருஞ் சிறப்புமிக்க அழகி மென்பொருளை அடைய உங்களுக்கும் விருப்பம்தானே? சரி. அதற்கு என்ன செய்ய வேண்டும்? அழகியின் சமீபத்திய பதிப்பின் வெளியீட்டை கீழே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து, இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator- CLICK HERE
"அழகி"யை உங்கள் கணினியில் நிறுவுவதில், உபயோகிப்பதில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் அண்ணன் "ஆகிரா" அவர்கள் தனது வலைத்தளத்தில் மிக எளிமையாக, படங்களுடன் விடையளித்துள்ளார்கள். அவற்றை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்.
அழகி மென்பொருள் கொண்டு தமிழில் தட்டச்சுவதில் சந்தேகங்கள் ஏதும் ஏற்படின், இப்பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இயன்ற வரையில் விரைவாகவும், தெளிவாகவும் தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.
'எல்லோர்' உபயோகத்திற்கும் அழகி இலவசமே! உடன்
http://azhagi.com சென்று, அழகியைப்
பதிவிறக்கி, உபயோகித்து, மட்டற்ற பயன் பெறுங்கள்...! மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்...!
வெல்க தமிழ்..! வாழ்க தமிழ்..!
தமிழோடு அழகியும்... வெல்க...! வாழ்க...!
on October 26, 2008 at 2:17 PM
wow!A great job done Antony...!!
well done keep it up!
அழகி மென்பொருட்களில் ராணி அழகிதான்!!
அன்புடன் அருணா
Post a Comment
அழகி தமிழ் மென்பொருள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் இங்கே நீங்கள் கேட்டறியலாம்.