அழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)


1) உங்களுக்கு யாராவது தங்கிலீஷில் "Enna naNbarae nalamaa? naan ingu nalam. veettil anaivarum nalamaa?" என்று மெயில் அனுப்புகிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

2) ஒரு திரைப்பாடலின் வரிகளுக்காக நீங்கள் தேடோ தேடென்று தேடி, அது தங்கிலீஷில் இப்படிக் கிடைக்கிறது.

poovae poochchoodavaa
enthan nenjil paal vaarkkavaa
vaasal paarththu,
kaNkaL pooththu
kaaththu ninRaen vaa...

3)எவருக்கேனும் தமிழில் தட்டச்ச தெரியாமல், பக்கம் பக்கமாக நாடகமோ, கதையோ ஆங்கிலத்தில்... (அதான் தங்கிலீஷ்ல)
அடியோ அடின்னு அடிச்சு வச்சிருக்கிறதா நெனச்சுக்குவம்.

என்னது? என் அழகுத் தமிழை இங்கிலீஷ்ல படிக்கிறாதான்னு? கடுப்பாய்டுவீங்க இல்லியா?

சரி!

அது எல்லாத்தையும் தமிழ்ல படிக்கணும்னா... மறுபடி டைப் பண்ணனுமா?

ஹப்பா...?

ஆளை விடுடா சாமி-ன்னு ஆயிடும் இல்லியா?

Ok! Ok!

எல்லாத்தையும் ஒரே வினாடியில யாராவது, தமிழ்ல மாத்திக் குடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்?

ஹ்ம்...!

அதுக்காக...
அலாவுதீனுடைய அற்புத விளக்குக்கு நான் எங்க போறது-ன்னு
ஆயாசமா இருக்கா?

அங்கதான் நம்ம அழகி உதவிக்கு வராங்க.

இந்த அழகி இருக்காங்களே...! அவங்களுக்கு நிகர் அவங்க மட்டும்தான்.

இந்த மாதிரி அற்புத விளக்கு சமாச்சாரமெல்லாம்,
அழகிக்கு அல்வா சாபிடற மாதிரி.

பக்கம் பக்கமா தங்கிலீஷ்ல நீங்க டைப் பண்ணி வச்சிருக்கற அம்பூட்டு மேட்டரையும்,
நொடியில தமிழுக்கு மாத்திக் குடுத்துடுவாங்க.

எப்பிடித் தெரியுமா?

முதல்ல அழகிய திறந்துக்கங்க.

இப்ப கீழ இருக்க மாதிரி ஒரு சன்னல் வரும்.



அதுல மேல இருக்க ETA பெட்டியில "ஆங்கிலத்துல" டைப் பண்ணா, கீழ உள்ள TTA பெட்டியில, "தமிழ்ல" வரும்.

இப்போ நீங்க தமிழுக்கு மாற்ற வேண்டிய English Text-ஐ Copy செய்து...
மேலே உள்ள ETA பெட்டியில் Paste பண்ணுங்க.

அவ்ளோதான்.

அந்த வினாடியே நீங்க விரும்பின தமிழ் எழுத்துக்கள்...
கீழ உள்ள TTA பெட்டியில் பளீரிடும்.

ஒரு உதாரணத்துக்கு...
மேல உள்ள "poovae poochchoodavaa" பாடல் வரிகளை தமிழுக்கு மாத்தியிருக்கேன்.



அப்புறமென்னங்க...?

என்சாய்.....! ஜமாய்...!

----------------------------------------------------

பின் குறிப்பு:

இன்னும் அதிக விபரங்களுக்கு கீழே உள்ள தொடுப்புகளில் க்ளிக் பண்ணிப் பாருங்க.

http://azhagi.com/pages/snaps/azPowerful.html

http://tech.groups.yahoo.com/group/azhagi/message/466

http://groups.google.com/group/azhagi/browse_thread/thread/26044a4d479e81b5?hl=en

http://groups.google.com/group/minTamil/browse_frm/thread/88fcf49e918fac2f#


ஞாபகம் வச்சுக்குங்க...

அழகி முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்! 100% FREE!

நீங்களும் உபயோகியுங்க...

மத்தவங்களுக்கும் சொல்லுங்க...

Saturday, May 16, 2009 | posted in | 1 comments [ More ]

உலகின் 9-ஆவது அதிசயமான 'அழகி' மென்பொருள் - முற்றிலும் இலவசம்.

ஆமாங்க!!! ஆமாம்!!!

'அழகி' மென்பொருள் - முற்றிலும் இலவசம்...

நீங்க செய்ய வேண்டியதெல்லாம்....

இங்கே போய் அழகியை டவுன்லோடு செய்து

உங்கள் கணினியில் நிறுவி விட்டு...

உங்கள் கீபோர்டில் F10 பட்டனை அழுத்தி விட்டு (நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்றே ஒன்று மட்டும்தாங்க)

Wordpad, Notepad, MS-Office (Word, Excel, Powerpoint, Access, ...), Yahoo mail, Gmail, மற்ற Mail, Yahoo! Messenger, Google Talk என்று எல்லாவற்றிலும் நேரிடையாக தமிழில் TYPE செய்யலாம்.

அம்புட்டு ஏங்க? இந்த ப்ளாக்கில் அழகியை உபயோகிச்சுத்தான் நான் நேரிடையா தமிழில் TYPE செஞ்சுட்டு இருக்கேன். எப்படி என்கிறீர்களா?
ரொம்ப சிம்பிள்!

"இங்க வாங்க அழகி" என்பதை எப்படி ஆங்கிலத்தில் TYPE செய்வீர்கள்?

"inga vaanga azhagi" என்றுதானே?

அப்படியே TYPE செய்யுங்கள். செய்து கொண்டே இருங்கள். அவ்வளவுதான். உங்கள் தமிழ் தட்டச்சில் மெய்மறந்து போவீர்கள்.



F10 பட்டனை அழுத்தியும் தமிழில் TYPE செய்ய முடியவில்லையா?

அப்படியானால், உங்கள் கணினியில் மொழிக்கோப்புகள் நிறுவப்படவில்லை என்று அர்த்தம். (Language files not yet installed).

இதைச் சரி செய்ய இதற்கு முந்தைய பதிவான "உங்கள் கணினியை யூனிகோடு மாவீரனாக மாற்றுங்கள்! (Enable UNICODE in your Computer)" படியுங்கள்.

நன்கு கவனிக்க:
நான் கூறியுள்ள வழிமுறையில், Windows XP CD "இல்லாமலேயே" மொழிக்கோப்புகளை நிறுவலாம்.



மற்ற தமிழ் மென்பொருட்களில் இல்லாத பற்பல வசதிகள் "அழகி"யில் உண்டு. அவை போக, எளிமையான/இயற்கையான/இயலுணர்வான ஒலிபெயர்ப்பில் (easy/natural/intuitive transliteration) அழகிக்கு நிகர் அழகி மட்டுமே என்றால் அது மிகையாகாது. இந்தத் தனிச் சிறப்பம்சத்தால் (unique capability), தமிழ்த் தட்டச்சு செய்வதில் நம் செயல்திறன்/உற்பத்தித்திறன்(productivity) வெகுவாய் அதிகம் ஆகிறது. அழகியின் இச்சிறப்பம்சம் குறித்த ஒரு விவரமான பதிவை இங்கே காணுங்கள்.

இவற்றைக் கூறுவதன் மூலம் மற்ற தமிழ் மென்பொருட்களைக் குறை கூறுவது என்றாகிவிடாது. எளிமையில்/வேகத்தில், எல்லா தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்களையும் விட அழகியே மேலோங்கி நிற்கிறது என்று சொல்ல வருகிறேன். அவ்வளவே! (அழகியை உபயோகித்துப் பார்த்தால், நீங்களே இதை நொடியில் உணர்வீர்கள்! சில [just a sample] 'அழகி' பயனாளர்களின் பாராட்டுரைகளை http://azhagi.com/comments.html பக்கத்தில் காணலாம்.
பற்பல பத்திரிகைகள், டி.வி சேனல்களின் பாராட்டு விமர்சனங்களை http://azhagi.com/press.html பக்கத்தில் காணலாம்.)

மற்றபடி, அனைத்துத் தமிழ் மென்பொருள் ஆசிரியர்களும் தமிழுக்குத் தொண்டாற்றுகிறவர்களே! அவ்வாசிரியர்களுக்கும், அழகியைப் படைத்த "திரு.விஸ்வநாதன்" அவர்களுக்கும் (2000-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை - 'அழகி' பிறந்து/வளர்ந்த கதை - இங்கே) என் இரு கரம் கூப்பிய நெஞ்சார்ந்த நன்றிகள், என்றென்றும்.

திரு. விஸ்வநாதன் அவர்களும் அனைத்து மென்பொருள்களுக்கும் தனது ஆழமான நன்றியுணர்வுகளை http://azhagi.com/indic.html என்ற பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான சுட்டியையும் 'அழகி' மென்பொருளின் உள்ளேயே, ஒரு திரையில், எப்பொழுதும் யாரும் எளிதில் பார்க்கும் வண்ணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


*** முக்கியக் குறிப்பு ***

தனிநபர்கள், நிறுவனங்கள் - எல்லோருக்குமே அழகி "முற்றிலும்" இலவசம். இருப்பினும், பணமும் செலுத்தலாம்.

உண்மையான உழைப்பை, மானுடத்தை மதிப்பவர்கள்....
பணம் செலுத்தி மகிழ்வீராக!

இது தொடர்பாக, அழகி குறித்த
ஒரு திரைப்பட இயக்குனரின் இந்தப் பதிவையும் தயவு கூர்ந்து படித்துப் பாருங்கள்.

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் ஆயிரமாயிரம் தனிநபர்கள் அழகியின் பயனாளர்கள். அப்பட்டியல் காண, http://azhagi.com/clients.html பார்க்கவும்.

Monday, January 19, 2009 | posted in , | 5 comments [ More ]

உங்கள் கணினியை யூனிகோடு மாவீரனாக மாற்றுங்கள்!.! (Enable UNICODE in your Computer)

உங்களில் சிலரது கணினியில் யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள் சரியாகத் தெரியாமல் பெட்டி, பெட்டியாக அல்லது கேள்விக்குறிகளாகத் தெரிகிறதா?

அழகியை உபயோகித்து 'யூனிகோடில்' தட்டச்சிடும்போது, சில செயலிகளில் மட்டும் சரியாக உங்களால் தட்டச்ச முடியவில்லையா?

அதற்குக் காரணம் - உங்கள் கணினியில் யூனிகோடிற்கான மொழிக் கோப்புகள் நிறுவப்படாமல் இருக்கலாம். அவற்றை நிறுவுவதற்கான வழிமுறை http://azhagi.com/uniset.html வலைப்பக்கத்தில், step-by-step தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உங்களுடைய கணினியில் விண்-XP அல்லது விண்-2000 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுவியிருந்தால், மேற்சொன்ன வழிமுறையைப் பின்பற்றி யூனிகோடு Enable செய்ய வேண்டுமாயின், உங்கள் கணினி "Operating system installation CD" - யைக் கேட்கும்.

CD உங்களிடம் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. அதை வைத்து யூனிகோட் மொழிக் கோப்புகளை மேற்சொன்ன 'நேரடி' வழிமுறையில் எளிதாய் நிறுவி விடலாம். ஆனால், உங்களிடம் CD இல்லையென்றால் (தவற விட்டிருக்கலாம், தொலைத்து விட்டிருக்கலாம்) எங்கு போவது? என்ன செய்வது?

இதோ, மிகவும் எளிதான ஒரு தீர்வு...!

நேராக, http://software.nhm.in/products/writer பக்கம் செல்லுங்கள். அங்குள்ள 'Download' பட்டனைக் கிளிக் செய்து, NHM Writer-ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள் (800 KB அளவிலான சிறிய கோப்பே இது). பதிவிறக்கம் செய்த NhmWriterSetup.exe கோப்பைக் கிளிக் செய்து, NhmWriter-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். இம்மென்பொருள் மொழிக்கோப்புகளைத் தானாகவே உங்கள் கணினியில் இறக்கி விடுகின்றது. அதாவது, இம்மென்பொருளை நிறுவுகையில், இம்மென்பொருள் மட்டுமல்லாது, தேவையான அனைத்து மொழிக் கோப்புகளும் (Language Files) நிறுவப்பட்டு, இறுதியில், ரீஸ்டார்ட் (Restart) செய்யச் சொல்லி ஒரு திரை வரும்.

O.K செய்து கணினியை ஒரு முறை restart செய்யுங்கள்..! (ஏதாவது சில காரணங்களால் Restart செய்யச் சொல்லும் திரை உங்கள் பார்வைக்கு வராவிட்டாலும் கூட, ஒரு முறை நீங்கள் கணினியை restart செய்தே ஆக வேண்டும்)

இப்போது உங்கள் கணினி ஒரு யூனிகோடு மாவீரனாக மாறியிருக்கும்.

இப்போது உங்கள் கணினியில்
அழகி -யை ஸ்டார்ட் செய்து,

F-10 "கீ"யை ஒரு முறை அழுத்திவிட்டு
கீழே Task bar- ல் அழகி சிவப்பாக மாறியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு....

Click Here to Enlarge Picture

Click Here to Enlarge Picture

இப்போது...
E.Mail,
Google Chat,
Yahoo Chat,
Blogging எனப்படும் வலைப்பூ பதிதல்,
MS-Office,
இன்னும் எங்கெல்லாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறீர்களோ அங்கெல்லாம்
அழகுத் தமிழில் தட்டச்சு செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்!

முக்கியக் குறிப்பு:
நீங்கள் NHM Writer உபயோகித்தும் தமிழில் ஒலிபெயர்க்கலாம். அது, முற்றிலும் உங்கள் விருப்பம். ஆனால், அழகியின் "ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல்-இணைப்பு" (english to tamil transliteration scheme) மற்ற எந்த ஒலிபெயர்ப்பு மென்பொருளையும் விட மிகவும் எளிதாக உள்ளது. அவ்வளவே!

அதாவது, அழகியை உபயோகித்து, குறைந்த விசை அழுத்தங்களில் (using less no. of keystrokes) நிறைய தட்டச்சிடலாம். அழகியின் எளிமையான/இயற்கையான/இயலுணர்வான (easy, flexible, natural and intuitive) ஒலிபெயர்ப்பு வசதியின் காரணமாக இது சாத்தியமாகிறது. இந்த வசதியை அளிப்பது அழகி மென்பொருள் ஒன்றே, இப்போதைக்கு. அழகியின் இத்தனித்துவம் (uniqueness) பற்றி மேலும் அறிய, கீழுள்ள இணைப்புகள் உதவி செய்யும்:

http://docs.azhagi.com
http://easy.azhagi.com

http://mazhalaigal.com/tamil/software/0806akr_azhagi.php

http://tamilsoftwares.blogspot.com/2008/10/9.html
http://tamilsoftwares.blogspot.com/2009/01/9.html

Sunday, October 26, 2008 | posted in , | 7 comments [ More ]

அழகி...! 9-ஆவது உலக அதிசயம்



உலகில் வேறெங்கும் இல்லாத, சிறப்பு மிகுந்த அம்சங்கள் கொண்ட, தனித்துவம் மிக்க ஒன்றைத்தான் அதிசயம் என்பார்கள்!

அந்த வகையில், தமிழ் மென்பொருட்களிலேயே,
"வேறெந்த மென்பொருளிலும் இல்லாத" சிறப்புமிக்க அம்சங்கள்,
மற்றும் குறிப்பாக...,
மிகவும் சுலபமான,
இயற்கையான,
இடத்திற்கேற்ப மாறி அமையும்
ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல்-இணைப்பு (English-to-Tamil phonetic keymappings. i.e. transliteration scheme) கொண்டு விளங்கும் தனித்துவமிக்க தமிழ் மென்பொருள்,
அழகி மட்டுமே!

'எப்படி?' என்ற வினாவிற்கான விவரமான விளக்கங்கள் அறிய,
http://azhagi.com/easy.html

மற்றும்

http://azhagi.com/docs.html
பார்க்கவும்.

அழகியின் 'இன்றியமையா' ஒலிபெயர்ப்பு அமைப்பு
(easiest and most natural transliteration scheme) குறித்து, மழலைகள்.காம் ஆசிரியர் திரு. ஆகிரா அவர்களும் கீழ்க்கண்ட பக்கங்களில் விரிவாகவும், விவரமாகவும் எழுதியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.
1) Easy transliteration with azhagi - part1
2) Easy transliteration with azhagi - part2

இத்தகைய தனிப்பெருஞ் சிறப்புமிக்க அழகி மென்பொருளை அடைய உங்களுக்கும் விருப்பம்தானே? சரி. அதற்கு என்ன செய்ய வேண்டும்? அழகியின் சமீபத்திய பதிப்பின் வெளியீட்டை கீழே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து, இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator- CLICK HERE

"அழகி"யை உங்கள் கணினியில் நிறுவுவதில், உபயோகிப்பதில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் அண்ணன் "ஆகிரா" அவர்கள் தனது வலைத்தளத்தில் மிக எளிமையாக, படங்களுடன் விடையளித்துள்ளார்கள். அவற்றை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்.

அழகி மென்பொருள் கொண்டு தமிழில் தட்டச்சுவதில் சந்தேகங்கள் ஏதும் ஏற்படின், இப்பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இயன்ற வரையில் விரைவாகவும், தெளிவாகவும் தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.

'எல்லோர்' உபயோகத்திற்கும் அழகி இலவசமே! உடன்
http://azhagi.com
சென்று, அழகியைப்

பதிவிறக்கி, உபயோகித்து, மட்டற்ற பயன் பெறுங்கள்...! மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்...!

வெல்க தமிழ்..! வாழ்க தமிழ்..!

தமிழோடு அழகியும்... வெல்க...! வாழ்க...!


Followers

Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

அழகி.....! My Blog FOR Azhagi...! Headline Animator

My Headlines

About Me

I am Anthony Muthu. I love 'Azhagi' software. Hence, this blog, dedicated to my favorite Azhagi.

I got paralysed below my chest in 1983 (when I was 11 years old). I have faced life with courage though, since then, and have continued to live it out with grit and determination. If you wish to know all about me, I request you to kindly pay a visit to my inspiring and inspirational blog http://mindpower1983.blogspot.com. Thanks.

Quote
Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring, all of which have the potential to turn a life around.
Unquote
- Leo Buscaglia

Recent Posts