ஆமாங்க!!! ஆமாம்!!!
'அழகி' மென்பொருள் - முற்றிலும் இலவசம்...
நீங்க செய்ய வேண்டியதெல்லாம்....
இங்கே போய் அழகியை டவுன்லோடு செய்து
உங்கள் கணினியில் நிறுவி விட்டு...
உங்கள் கீபோர்டில் F10 பட்டனை அழுத்தி விட்டு (நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்றே ஒன்று மட்டும்தாங்க)
Wordpad, Notepad, MS-Office (Word, Excel, Powerpoint, Access, ...), Yahoo mail, Gmail, மற்ற Mail, Yahoo! Messenger, Google Talk என்று எல்லாவற்றிலும் நேரிடையாக தமிழில் TYPE செய்யலாம்.
அம்புட்டு ஏங்க? இந்த ப்ளாக்கில் அழகியை உபயோகிச்சுத்தான் நான் நேரிடையா தமிழில் TYPE செஞ்சுட்டு இருக்கேன். எப்படி என்கிறீர்களா?
ரொம்ப சிம்பிள்!
"இங்க வாங்க அழகி" என்பதை எப்படி ஆங்கிலத்தில் TYPE செய்வீர்கள்?
"inga vaanga azhagi" என்றுதானே?
அப்படியே TYPE செய்யுங்கள். செய்து கொண்டே இருங்கள். அவ்வளவுதான். உங்கள் தமிழ் தட்டச்சில் மெய்மறந்து போவீர்கள்.
F10 பட்டனை அழுத்தியும் தமிழில் TYPE செய்ய முடியவில்லையா?
அப்படியானால், உங்கள் கணினியில் மொழிக்கோப்புகள் நிறுவப்படவில்லை என்று அர்த்தம். (Language files not yet installed).
இதைச் சரி செய்ய இதற்கு முந்தைய பதிவான "உங்கள் கணினியை யூனிகோடு மாவீரனாக மாற்றுங்கள்! (Enable UNICODE in your Computer)" படியுங்கள்.
நன்கு கவனிக்க:
நான் கூறியுள்ள வழிமுறையில், Windows XP CD "இல்லாமலேயே" மொழிக்கோப்புகளை நிறுவலாம்.
மற்ற தமிழ் மென்பொருட்களில் இல்லாத பற்பல வசதிகள் "அழகி"யில் உண்டு. அவை போக, எளிமையான/இயற்கையான/இயலுணர்வான ஒலிபெயர்ப்பில் (easy/natural/intuitive transliteration) அழகிக்கு நிகர் அழகி மட்டுமே என்றால் அது மிகையாகாது. இந்தத் தனிச் சிறப்பம்சத்தால் (unique capability), தமிழ்த் தட்டச்சு செய்வதில் நம் செயல்திறன்/உற்பத்தித்திறன்(productivity) வெகுவாய் அதிகம் ஆகிறது. அழகியின் இச்சிறப்பம்சம் குறித்த ஒரு விவரமான பதிவை இங்கே காணுங்கள்.
இவற்றைக் கூறுவதன் மூலம் மற்ற தமிழ் மென்பொருட்களைக் குறை கூறுவது என்றாகிவிடாது. எளிமையில்/வேகத்தில், எல்லா தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்களையும் விட அழகியே மேலோங்கி நிற்கிறது என்று சொல்ல வருகிறேன். அவ்வளவே! (அழகியை உபயோகித்துப் பார்த்தால், நீங்களே இதை நொடியில் உணர்வீர்கள்! சில [just a sample] 'அழகி' பயனாளர்களின் பாராட்டுரைகளை http://azhagi.com/comments.html பக்கத்தில் காணலாம்.
பற்பல பத்திரிகைகள், டி.வி சேனல்களின் பாராட்டு விமர்சனங்களை http://azhagi.com/press.html பக்கத்தில் காணலாம்.)
மற்றபடி, அனைத்துத் தமிழ் மென்பொருள் ஆசிரியர்களும் தமிழுக்குத் தொண்டாற்றுகிறவர்களே! அவ்வாசிரியர்களுக்கும், அழகியைப் படைத்த "திரு.விஸ்வநாதன்" அவர்களுக்கும் (2000-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை - 'அழகி' பிறந்து/வளர்ந்த கதை - இங்கே) என் இரு கரம் கூப்பிய நெஞ்சார்ந்த நன்றிகள், என்றென்றும்.
திரு. விஸ்வநாதன் அவர்களும் அனைத்து மென்பொருள்களுக்கும் தனது ஆழமான நன்றியுணர்வுகளை http://azhagi.com/indic.html என்ற பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான சுட்டியையும் 'அழகி' மென்பொருளின் உள்ளேயே, ஒரு திரையில், எப்பொழுதும் யாரும் எளிதில் பார்க்கும் வண்ணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*** முக்கியக் குறிப்பு ***
தனிநபர்கள், நிறுவனங்கள் - எல்லோருக்குமே அழகி "முற்றிலும்" இலவசம். இருப்பினும், பணமும் செலுத்தலாம்.
உண்மையான உழைப்பை, மானுடத்தை மதிப்பவர்கள்....
பணம் செலுத்தி மகிழ்வீராக!
இது தொடர்பாக, அழகி குறித்த
ஒரு திரைப்பட இயக்குனரின் இந்தப் பதிவையும் தயவு கூர்ந்து படித்துப் பாருங்கள்.
நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் ஆயிரமாயிரம் தனிநபர்கள் அழகியின் பயனாளர்கள். அப்பட்டியல் காண, http://azhagi.com/clients.html பார்க்கவும்.